இந்தியா

உத்தரகாண்டில் பரவிய காட்டுத்தீ - கட்டுக்குள் கொண்டு வந்த மீட்புப்படை

அனைத்து குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் காட்டுத்தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

உத்தரகாண்டில் உள்ள பாசுகான் அருகே நேற்று இரவு ஏற்பட்ட காட்டுத்தீ, குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக செயல்பட்ட தலைமைக் காவலர் துர்கேஷ் ரதுடி தலைமையிலான உஜேலி காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மாநில பேரிடர் மீட்புப்படை குழுவினர் தேவையான உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சம்பவ இடத்தில் மாநில பேரிடர் மீட்புப்படை குழுவினர், வனத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். அனைத்து குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் காட்டுத்தீ வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ குடியிருப்புப் பகுதிக்கு பரவால் தடுக்கப்பட்டது.

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் ஏற்பட இருந்த பெரிய அசம்பாவிதத்தை தடுக்க முடிந்தது என மாநில பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT