உத்தரப் பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்த அப்பெண் ஹபீப்வாலா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அங்குப் பணிபுரிந்த திருமணமான மருத்துவர் ஒருவர், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பெண் கர்ப்பமடைந்த நிலையில், அந்த மருத்துவர் அவரை கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாகக் கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார்
கடந்த ஜூன் 2ஆம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ ஓம் குமார், "இது ஒரு தனிநபரால் நடத்தப்பட்ட குற்றம் அல்ல, இது ஒரு கூட்டுப் பாலியல் வன்புணர்வு.
அந்தப் பெண்ணைத் தனது மதத்திற்கு மாறுமாறு அழுத்தம் கொடுத்து, அவருக்குத் தடை செய்யப்பட்ட இறைச்சியை வலுக்கட்டாயமாக உண்ண வைத்துள்ளனர்" என குற்றம்சாட்டினார்.
போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்த எம்.எல்.ஏ ஓம் குமார், குற்றவாளி மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.