இந்தியா

உ.பி-ல் பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து- 4 மாணவர்கள் உயிரிழப்பு

பள்ளி மேலாளர் சல்மான், ஒரு மாணவர் மேல் சிகிச்சைக்காக கான்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜில் உள்ள லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் இன்று காலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பள்ளிப் பேருந்து மீது லாரி மோதியது. இதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 24 மாணவர்கள் உள்பட 32 பேர் காயம் அடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பள்ளி மேலாளர் சல்மான், ஒரு மாணவர் மேல் சிகிச்சைக்காக கான்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாஜ்மகாலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு மாணவர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.

SCROLL FOR NEXT