இந்தியா

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியா வருகை

டெல்லியில் நடைபெற உள்ள குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ 4 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.

அவருக்கு, இந்தியா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல் நகரமாக கொல்கத்தா வந்துள்ள அவர், அடுத்தடுத்த ஆக்ரா, ஜெய்பூர் நகரங்களுக்கு செல்கிறார்.

வரும் மே 26ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

மேலும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை வரவேற்று, தனது வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், "எனது நண்பர் செயலாளர் மார்கோ ரூபியோவை இந்தியாவிற்கு வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்!

மேலும், வலுவான அமெரிக்க-இந்தியக் கூட்டாண்மைக்கான அமெரிக்க அதிபரின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதில் கவனம் செலுத்தும் குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் உட்பட, எங்களுக்கு முன்னால் ஒரு லட்சியமிக்க செயல்திட்டம் உள்ளது.

சிறந்த உரையாடல்களை எதிர்நோக்கியும், இணைந்து உண்மையான முன்னேற்றத்தைக் காணவும் ஆவலுடன் உள்ளேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.