உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த திவ்யாவுக்கும், டெல்லியில் வசிக்கும் சிவம் குமாருக்கும் ஆன்லைன் மெட்ரிமோனி மூலாமாக அண்மையில் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
விருந்தோம்பல் மேலாண்மை படித்த சிவம், திருமணத்திற்குப் பிறகு தன் மனைவியுடன் துபாய்க்குத் தேனிலவு செல்லத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அவர் தன் மனைவியுடன், தன் பெற்றோர், சகோதரி மற்றும் சகோதரரையும் அதே பயணத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார்.
தன் கணவருடன் தனிமையில் நேரம் செலவிட நினைந்த திவ்யாவுக்கு இது பிடிக்கவில்லை. தேனிலவு என்பது தம்பதியினரின் தனிப்பட்ட விஷயம் என்றும், குடும்ப உறுப்பினர்களுடன் செல்வது பயணத்தின் நோக்கத்தையே கெடுத்துவிடும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் தன் குடும்பத்தினரை மகிழ்விப்பதற்காகவே அவர்களை அழைத்துச் வந்ததாகவும், அதில் எந்தத் தவறும் இல்லை என்றும் கணவர் வாதிட்டார்.
இதனால் இருவருக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டு விவாகரத்து முடிவு வரை சென்றது.
இருவருக்கும் மீரட் போலீஸ் லைன்ஸ் குடும்ப ஆலோசனை மையத்தில் மூன்று சுற்றுப் ஆலோசனை அமர்வு நடந்தது. ஆனால் இருவரும் சமாதானம் ஆவதாக இல்லை. நான்காம் சுற்று விரைவில் நடைபெற உள்ளது.
இந்த சம்பவம் இணையத்தில் விவாதப்பொருளாக மாறி, இளைஞர்கள் மத்தியில் தனியுரிமை மற்றும் குடும்ப நலன் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.