இந்தியா

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் காலமானார்!

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்ரி தேவி (91) உத்தரகாண்டின் பௌரி கார்வால் மாவட்டத்தில் உள்ள தனது பூர்வீக கிராமமான பஞ்சூரில் இன்று காலை (நவ.20) காலமானார்.

இவரது மறைவிற்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில்.,

“உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் சாவித்திரி தேவி மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும், மனவேதனையையும் அளிக்கிறது.

ஒரு தாயின் அன்பு, ஆசிகள் மற்றும் கனிவான பாசம் ஆகியவை வாழ்வின் மிக விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாகும். அவரது மறைவு, அந்த குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

மறைந்த அந்த ஆன்மாவிற்கு பாபா கேதார்நாத்தின் திருவடிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்றும், இந்த ஆழ்ந்த துயரத்தைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை யோகி அவர்களுக்கும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் என்றும் பாபா கேதார்நாத்திடம் பிரார்த்திக்கிறேன்.

ஓம் சாந்தி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சாவித்திரி தேவியின் இறுதிச் சடங்குகள் நாளை ஹரித்வாரில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SCROLL FOR NEXT