கடத்தல் 
இந்தியா

தாத்தாவுடன் வண்டியில் செல்லும்போது 5 வயது சிறுமி கடத்தல்.. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

ஒரு அவசர வேலைக்காக தாத்தா பைக்கை ஓரம்கட்டி நிறுத்தியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் கடந்த ஜூன் 11 அன்று இரவு 5 வயது சிறுமி தனது தாத்தாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாள்.

பான்சடி என்ற பகுதி அருகே ஒரு அவசர வேலைக்காக தாத்தா பைக்கை ஓரம்கட்டி நிறுத்தியுள்ளார். சிறுமி பைக்கிலேயே அமர்ந்திருந்தாள்.

அந்தச் சமயம் பார்த்து, வேறொரு பைக்கில் அங்கு வந்த சந்தன் குமார் ஷா (29) எனபவன் , பைக்கில் தனியாக அமர்ந்திருந்த அந்த சிறுமியை தூக்கிக்கொண்டு தப்பி ஓடினான்.

தேடுதல் வேட்டை

குழந்தையைக் காணாமல் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நேற்று முன் தினம் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார்.

குற்றவாளியைப் பிடிக்க உடனடியாகப் பல தனிப்படைகளை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அன்றைய தினமே சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாள்.

பாலியல் வன்கொடுமை

மீட்கப்பட்ட சிறுமி உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாள்.

அப்போது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

குற்றவாளி சந்தன் குமார் ஷா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அவனை நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT