இந்தியா

"ஒவ்வொரு ராமனும் கொல்லப்படும் வரை.." உளறிக்கொட்டிய ரேகா குப்தா - வீடியோ பகிர்ந்து ஆம் ஆத்மி விமர்சனம்

ரேகா குப்தா ராமனை கொல்கிறார், அதே நேரத்தில் மோடி ஜி ஏற்கனவே ராமராஜ்ஜியத்தை கொன்றுவிட்டார்

டெல்லி ஆசாத்பூரில் நடந்த ராம்லீலா நிகழ்ச்சியின் போது முதலமைச்சர் ரேகா குப்தா தவறுதலாக கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லியின் முன்னாள் அமைச்சருமான சௌரப் பரத்வாஜ், ரேகா குப்தாவின் உரையின் காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

ராமன் கொல்லப்படும் வரை

அக்டோபர் 13 அன்று ஆசாத்பூர் ராம்லீலா நிகழ்வில் ரேகா குப்தா கலந்து கொண்டார் அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட அந்த காணொளியில், “ஒவ்வொரு ராமனும் கொல்லப்படும் வரை, சமூகம் தூய்மையாகவும் ஒழுங்காகவும் இருக்காது” என்று ரேகா குப்தா கூறுகிறார். ராவணன் என்பதற்கு பதிலாக ராமன் என அவர் தவறுதலாக கூறியுள்ளார்.

வெட்கக்கேட்டின் உச்சம்

இருப்பினும் இந்தக் கருத்து, பாஜக ராம விரோத மனப்பான்மையைக் கொண்டிருப்பதாக பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

முதலமைச்சரின் பேச்சு "வெட்கக்கேட்டின் உச்சம்" என்று குறிப்பிட்டதோடு, சனாதனிகளும் ராமர் பக்தர்களும் இதனால் வெட்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ராமராஜ்ஜியத்தை கொன்றுவிட்டார்

இந்த சர்ச்சை தொடர்பாக குப்தாவையும் பிரதமர் மோடியையும் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா கக்கர் விமர்சித்துள்ளார்.

"ரேகா குப்தா ராமனை கொல்கிறார், அதே நேரத்தில் மோடி ஜி ஏற்கனவே ராமராஜ்ஜியத்தை கொன்றுவிட்டார்" என்று கக்கர் தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து பாஜக எந்த பதிலும் வெளியிடவில்லை. ரேகா குப்தா வாய்தவறி பேசுவது இது முதல் முறை அல்ல.

முதல் முறை அல்ல

கடந்த ஜனவரி 6 அன்று, டெல்லி சட்டமன்றத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளை குறிப்பிடுகையில், குப்தா, பகத் சிங் "செவிடான காங்கிரஸ் அரசாங்கத்திற்கு" எதிராக ஒரு குண்டை வீசியதாகக் கூறினார்.

பின்னர் அவர், "பிரிட்டிஷ்" என்பதற்குப் பதிலாகத் தவறுதலாக "காங்கிரஸ்" என்று கூறிவிட்டதாகத் தெளிவுபடுத்தினார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், ஒரு பொது நிகழ்ச்சியில் குப்தா காற்றின் தரம் என்பதை குறிக்கும் AQI என்பதை “AIQ” என்று உச்சரித்த காணொளி ஒன்று வைரலானது.

SCROLL FOR NEXT