மும்பையில் உள்ள காலபந்து மைதானத்தில் இருந்து பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் நேற்று தனது காரில் வந்து கொண்டிருந்தபோது, இரண்டு நபர்கள் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தும் அதிர்ச்சி காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 1998-ஆம் ஆண்டு கலைமான் (blackbuck) என்ற மான் இனத்தை சேர்ந்த வனவிலங்கை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வகை மான் இனங்கள் ராஜஸ்தானை சேர்ந்த பிஷ்னோய் சமூகத்தினரிடையே புனிதமாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து கலைமான் உயிரினத்தை வேட்டையாடிய சல்மான் கானுக்கு பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர் கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும், சல்மான் கானுடன் தொடர்புடைய மற்ற நபர்களுக்கும் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்தது.
இந்த நிலையில் சல்மான் கானுடன், பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் நட்பில் இருந்து வருகிறார்.
இதையடுத்து சமீபத்தில் வெளியான ஒரு ஆடியோ பதிவில், “டைகர் ஷெராஃப் எங்கள் உத்தரவுகளை கேட்கவில்லை, அவர் சல்மான் கானுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
அவர் எங்கள் அடுத்த கொலை பட்டியலில் இருக்கிறார்” என்று பிஷ்னோய் ஆதரவாளரான அனில் பணிடிட் கூறினார்.
இந்த நிலையில் நேற்று மும்பை பகுதியில் உள்ள ஜூஹூ கால்பந்து மைதானத்தில் இருந்து தனது பிஎம்டபிள்யூ செடான் காரில் டைகர் ஷெராஃப் வெளியே வந்து கொண்டிருந்தார்.
இந்த காரின் முன் இருக்கையில் டைகர் ஷெராஃப் அமர்ந்திருந்தார், அவரின் பக்கத்து இருக்கையில் டிரைவர் அமர்ந்திருந்தார்.
இதையடுத்து மைதானத்தில் இருந்து வெளியே வந்த காரில் இருந்த ஷெராஃபை நோக்கி இரண்டு இளைஞர்கள் கைத் துப்பாக்கியால் சுட்டனர்.
இதைத்தொடர்ந்து காரை நிறுத்திவிட்டு டிரைவர் வெளியே வந்ததும், அந்த இளைஞர்கள் தங்களது கூட்டாளி ஒருவரின் பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.
இந்த 19 வினாடி காணொளி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த டைகர் ஷெராஃப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் உயிருக்கு ஆபத்து எதுவுமின்றி, அவர் நலமுடன் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
டைகர் ஷெராஃப் வந்த பிஎம்டபிள்யூ காரின் கண்ணாடி, குண்டு துளைக்காத வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால் அவர் உயிர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.