இந்தியா

விவசாயிகளுடன் வயலில் இறங்கி நாற்று நட்ட குமாரசாமி

மத்திய மந்திரி குமாரசாமி சீதாபுரா கிராமத்தில் நாற்று நட்டார். முன்னதாக அவர் காவிரி ஆற்றுக்கு பூஜை செய்து வழிபட்டார்.

மாண்டியா:

பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் கனரக தொழில்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார் குமாரசாமி.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டம் பாண்டவபுராவின் சீதாபுரா கிராமத்தில் நிலம் ஒன்றில் மத்திய மந்திரி குமாரசாமி இன்று நாற்று நட்டார்.

காவிரி ஆற்றுக்கு பூஜை செய்த குமாரசாமி, அதன்பின் நிலத்தில் இறங்கி நாற்று நட்டார்.

ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டில் முதல் மந்திரியாக இருந்த குமாரசாமி நிலத்தில் இறங்கி நாற்று நட்டு, பயிரிடும் பணிகளை தொடங்கி வைத்து விவசாயிகளை உற்சாகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.