இந்தியா

ஜம்மு காஷ்மீரில் மாயமான 2 காவலர்கள் குண்டு பாய்ந்த நிலையில் சடலமாக மீட்பு

சோதனைச் சாவடி மீது நடத்திய தாக்குதலில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் 2 காவலர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 2 காவல்ரகள் உடலில் குண்டு பாய்ந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பாபி சந்த் (57), ராஷ்பல் குமார் (45) ஆகிய அவ்விருவர் உள்ளூர் காவல்துறையின் ஸ்பெஷல் அபரேஷன்ஸ் குரூப் (எஸ்.ஒ.ஜி) பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர்.

ஜம்மு காஷ்மீரின் தாச்சன் (DACHHAN) பகுதியில் உள்ள கியார் கிராமத்தில் அவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று அவர்களின் முகாமில் இருந்து தர்னா-மார்வாவில் உள்ள ராணுவ சாவடி வரை ரோந்து பணிக்காக அவர்கள் சென்றிருந்தனர். பணி முடித்து திரும்பிக்கொண்டிருந்தபோது அவர்கள் காணாமல் போயினர்.

அவர்களை தேடும் பணி நடந்து வந்த சூழலில் இன்று அவர்களின் உடல்கள் குண்டுகள் துழைத்த நிலையில் மீட்கப்டுள்ளன.

முன்னதாக குல்காம் மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் சோதனைச் சாவடி மீது நடத்திய தாக்குதலில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்த நிலையில் இரு காவலர்கள் சடலமாக மீட்க்கபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT