இந்தியா

புனே நீர்வீழ்ச்சியில் மூழ்கி இருவர் பலி- 3 பேரை தேடும் பணி தீவிரம்

நீரில் மூழ்கி ஒரு பெண், 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளனர்.மீட்பு குழுவினர் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் மூழ்கி சிறுமி உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் மாயமாகியுள்ளனர்.

லோனாவாலா பகுதியில் உள்ள புஷி அணை அருகே நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

நீரில் மூழ்கி ஒரு பெண், 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளனர். மேலும், 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனும் மாயமாகியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், விபத்தில் சிக்கிய அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT