இந்தியா

2 தலைகளுடன் பிறந்த எருமை கன்று

தகவல் பரவியதும் அருகே உள்ள கிராமங்களில் இருந்தும் மக்கள் ஆச்சரியத்துடன் வந்து கன்றை பார்த்துச் செல்கின்றனர்.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் பாபுபாய் தாக்கூர் என்பவரின் வீட்டில் வளர்க்கப்படும் எருமை மாடு, ஒரே உடலும் 2 தலைகளும் கொண்ட அரிய வகை எருமைக்கன்றை ஈன்றுள்ளது.

கன்று

இந்த கன்றுக்கு ஒரே ஒரு உடலும் 4 கால்களும் உள்ளன. ஆனால் 2 தனித்தனி தலைகள், 4 கண்கள், 4 காதுகள் மற்றும் 2 வாய்கள் அமைந்துள்ளன. இந்த தகவல் பரவியதும் அருகே உள்ள கிராமங்களில் இருந்தும் மக்கள் ஆச்சரியத்துடன் வந்து கன்றை பார்த்துச் செல்கின்றனர். பலர் இதனை இயற்கையின் அதிசயமாகவும், தெய்வீக நிகழ்வாகவும் கருதுகின்றனர்.

SCROLL FOR NEXT