இந்தியா

மாடல் அழகி த்விஷா கொலை வழக்கில் பத்திரிகையாளர்களை ஆக்ரோஷமாக திட்டிய வழக்கறிஞர்

நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், வழக்கறிஞர் ஏனோஷ் ஜார்ஜிடம் அடுக்கடுக்காக கேள்வி கேட்ட செய்தியாளர்கள்.

உத்திர பிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த த்விஷா ஷர்மா, மாடல் அழகியாகவும் நடிகையாகவும் திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த வாரம் போபாலின் கட்டாரா மலைப் பகுதியில் உள்ள கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் த்விஷா ஷர்மாவின் உடல் மீட்கப்பட்டது.

தனது மகளை வரதட்சணை தொடர்பாக துன்புறுத்தி கொன்றுவிட்டதாகவும், அவர் வசித்து வந்த வீட்டின் சிசிடிவி கேமரா காட்சிகள் 2 நாட்கள் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் முரண்பாடு உள்ளதாகவும் பெண்ணின் தந்தை நவ்நீதி ஷர்மா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பாரதிய நியாய சம்ஹிதா 80(2), 85 மற்றும் 3(5) பிரிவு வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் பெண்ணின் கணவர் சமர்த் சிங் மற்றும் அவரின் தாயாரும் ஓய்வுபெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதியுமான கிரிபலா சிங் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் தலைமறைவான சமர்த் சிங் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படியும் அதிகாரிகள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். சமர்த் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.30,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமர்த்தின் தாயாரான கிரிபலா சிங் தொடர்ந்து வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில், மூன்றாவது முறையாக அவருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கிரிபலா சிங்கின் வழக்கறிஞர் ஏனோஷ் ஜார்ஜிடம், வழக்கு தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது, இங்கிருந்து வெளியே போங்கள் என்று மிகவும் ஆக்ரோஷமாக கூறினார்.

SCROLL FOR NEXT