இந்தியா

‘இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜனநாயகமல்ல’ - போராட்டம் குறித்து சூர்யகுமார் யாதவின் மனைவி கருத்து!

மோடி மீதான வெறுப்பு என்ற பெயரில் நாம் நம்முடைய முதுகெலும்பை இழந்துவிட்டோமா?

போராட்டம் என்ற பெயரில் இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜன நாயகம் அல்ல என தற்போது நாடு முழுவதும் வெடித்துள்ள நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ்வின் மனைவி தேவிஷா ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ள அவர்.,

“நீட் தேர்வுக்கான போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்; கல்வித் துறையில் பெரும் சீர்திருத்தங்கள் தேவை; ஒரு மாணவர் கூட உயிரிழந்திருக்கக் கூடாது. ஆனால், கல்வீச்சுச் சம்பவங்கள் போராட்டத்தை வலுப்படுத்தாது என்றும் நான் கூறுகிறேன்.

பிரிவு 370-ஐக் கோருவது நீட் தேர்வு விவகாரம் சார்ந்ததல்ல; இந்தியாவை நேபாளமாக மாற்றுவது ஜனநாயகமும் அல்ல; ஒரு மதத்தை மட்டும் இழிவுபடுத்துவது நீட் தேர்வுக்கான போராட்டம் ஆகாது;

‘அல்லாஹ்வின் பெயர் நிலைத்திருக்கட்டும்’ போன்ற முழக்கங்கள் இதற்குத் தீர்வு காணாது. ஆனால் உங்களால் கண்டிக்க முடியுமா?இதில் எதையாவது... அல்லது மோடி மீதான வெறுப்பு என்ற பெயரில் நாம் நம்முடைய முதுகெலும்பை இழந்துவிட்டோமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.