இந்தியா

மறுதேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் திரிணாமுல் வேட்பாளர் திடீர் விலகல்!

மறுதேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஃபால்டா தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் திடீர் என்று விலகியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது ஃபால்டா தொகுதியின் வாக்குப்பதிவு அத்துமீறல், சாவடி ஆக்கிரமிப்பு மற்றும் வாக்கு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதாகக் புகார்கள் எழுந்தன.

இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஃபால்டா தொகுதிக்கு மறுதேர்தலை மே 21-ந்தேதி அன்று அறிவித்திருந்தது, இந்நிலையில் மறுதேர்தலுக்கு 2 நாட்கள் உள்ள நிலையில் இன்று ஃபால்டா சட்டமன்றத் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் திடீரென விலகியுள்ளார்.

இவர் விலகியதை குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:-

ஜஹாங்கீர் கான் தேர்தலில் இருந்து பின்வாங்கியது அவருடைய சொந்த முடிவு என்றும், இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் திரிணாமுல் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

ஃபால்டா தொகுதியில் மட்டும் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பல கட்சி அலுவலகங்கள் பாழாக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

இந்த அரசியல் நெருக்கடியை தாங்க முடியாமல் கூட வேட்பாளர் ஜஹாங்கீர் கான் விலகியிருக்கலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருக்கிறது.