ரிதப்ரதா பானர்ஜி- மம்தா பானர்ஜி
இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி பிரிவுக்கு பேரிடியை இறக்கிய கொல்கத்தா உயர்நீதிமன்றம்

மம்தா பானர்ஜிக்கு அதிருப்தியான குழு நியமித்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மேற்கு வங்க அரசியலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதிருப்தி தலைவரான ரிதப்ரதா பானர்ஜியின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்த பிறகு, மம்தா பார்னஜிக்கு எதிராக அதிருப்பு குழு உருவானது. மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்கள் மம்தாவுக்கு எதிராக செயல்பட்டு தனி அதிருப்தி பிரிவாக செயல்பட்டது. அவர்கள் நாங்கள் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்று உரிமை கொண்டாடி வருகிறார்கள்.

இதற்கிடையே மேற்கு வங்க சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சோபன்தேப் சட்டோபாத்யாயை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்தார். ஆனால், கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ரிதப்ரதா பானர்ஜி அந்தப் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார்.

கடந்த ஜூன் 3-ம் தேதி சட்டப்பேரவை சபாநாயகர் ரதீந்திர போஸ், ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரித்தார். இதனை எதிர்த்து சோபன்தேப் சட்டோபாத்யாய் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரிதப்ரதாவின் நியமனம் ரத்து

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண ராவ், ரிதப்ரதாவின் நியமனத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் நியமனம் தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் மீண்டும் பரிசீலித்து, உரிய காரணங்களுடன் புதிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸில் ஏற்பட்ட உள்கட்சி மோதலுக்கு மத்தியில் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இதனால் ரிதப்ரதா ஆதரவு அணிக்கு அரசியல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்தகட்டமாக சபாநாயகர் எடுக்கும் முடிவே மேற்கு வங்க சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்கும்.

SCROLL FOR NEXT