இந்தியா

திரிணாமுல் கட்சிக்கே நெருக்கடி: இது செய் அல்லது செத்துமடி போராட்டம்- மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சிலர் பிளவுப்படுத்த சதி செய்து வருவதாக மம்மா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பின் பல்வேறு இடங்களில் வன்முறை நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் கொல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட தொண்டரின் வீட்டிற்குச் சென்ற அபிஷேக் பானர்ஜி கல் மற்றும் முட்டைகள் வீசி தாக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த மம்தா பானர்ஜி முடிவு செய்தார். ஆனால், போலீசார் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அனுமதி வழங்க மறுத்தது. இதனால் இந்த இடத்திற்கு செல்லும் வழியில் மம்தான தடுத்து நிறுத்தப்பட்டார். அந்த இடத்திலேயே தர்ணா போராட்டம் மேற்கொண்டார்.

அப்போது சிலரால் கட்சியை பிளவுப்படுத்தும் சதி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இருப்புக்கே நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது செய் அல்லது செத்துமடி போராட்டம் எனத் தெரிவித்தார்.

அத்துடன் மற்ற தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறினாலும், தொண்டர்களை நாங்கள் கைவிடமாட்டோம் என்று தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 50 எம்.எல்.ஏ.-க்கள் மம்தாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிளவு படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.