அடித்துச் செல்லப்பட்ட கார்  
இந்தியா

கோவிலுக்கு செல்லும் வழியில் சோகம்.. கரைபுரண்ட ஓடை நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் பலி

2 பெண்கள், 2 ஆண்டுகள், 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும், டாக்சி ஓட்டுனரும் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மத்திய பிரதிஷ்டத்தில் பக்தர்கள் சென்ற வாகனம் ஓடை நீரில் அடித்துச் உள்ளத்தில் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.

ஒடிசாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மத்திய பிரதேசத்துக்கு ஆன்மீக பயணம் வந்துள்ளனர்.

உஜ்ஜைனுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து டாக்சி மூலம் அகார் மால்வா மாவட்டத்தில் உள்ள நால்கேதாவில் உள்ள கோவிலுக்கு இன்று சென்றுகொண்டிருந்தனர்.

விபத்து

டாக்சி வாகனம் மா பாக்லாமுகி கோவில் அருகே சென்றபோது கரைபுரண்டு ஓடிய ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டு விபத்தில் சிக்கியது.

இதில் 2 பெண்கள், 2 ஆண்டுகள், 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும், டாக்சி ஓட்டுனரும் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.

தகவலறிந்து விரைந்த மீட்புப்படையினர் வாகனத்தை ஓடையில் இருந்து வெளியே தூக்கி உள்ளே இருந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

அவர்களின் அடையாளத்தை அறியும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது .

மழை

மாவட்ட ஆட்சியர் சேர் சிங் மீனா கூறுகையில், இந்த பகுதியில் 37 மிமி அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது.

இது அபாயகரமான மழைப்பொழிவு இல்லை என்றாலும் இதனால் கோவிலின் முன் இருந்த ஓடை நீர் அபாயகரமான அளவில் அதிகரித்து கரைபுரண்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கால்வாயை கடக்க பாலமும் அப்பகுதியில் உரிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவும் வலியுறுத்தி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT