2025-26 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வி வளர்ச்சிப் குறியீடு பட்டியல் வெளியாகி உள்ளது.
அதில், இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் அங்கு வழங்கப்படும் கல்வித் தரம் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளி கல்விக்கான அணுகல், பங்களிப்பு, தக்கவைப்பு, தரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய 5 பிரிவுகளின் கீழ் இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
பள்ளிகள் கிடைக்கும் தன்மை, சேர்க்கை மற்றும் சமத்துவம், மாணவர் தக்கவைப்பு, கற்றல் முடிவுகள் மற்றும் பள்ளி வசதிகள் உள்ளிட்ட காரணிகளும் அடங்கும்.
அதன்படி இந்த குறியீட்டில் டாப் 10 பட்டியலில் யூனியன் பிரதேசமான சண்டிகர் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் நம் அண்டை மாநிலமான கேரளா உள்ளது.
பட்டியலில் புதுச்சேரி 3வது இடத்தையும், கோவா 4வது இடத்தையும், டெல்லி 5வது இடத்தையும், பஞ்சாப் 6வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது தமிழ்நாடு. கடந்த முறையைவிட 0.018 மதிப்பெண் தமிழ்நாட்டிற்கு அதிகரித்தாலும், 7 வது இடத்தையே தக்கவைத்துள்ளது.
பட்டியலில் அடுத்தாக அந்தமான் நிகோபார் தீவு 8வது இடத்திலும் லட்சத்தீவு 9வது இடத்திலும், அரியானா 10வது இடத்திலும் உள்ளது.