இந்தியா

இந்தத் தேர்தல் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கானது: தமிழக வாக்காளர்களுக்கு கார்கே வேண்டுகோள் | TN Election 2026

உங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி, உங்கள் கூட்டாட்சி உரிமைகளைப் பறிக்க முயல்பவர்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இது எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் கார்கே வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே, இன்றைய போராட்டம் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கானது. இப்போராட்டம் கூட்டாட்சித் தத்துவம், பகுத்தறிவு, சமத்துவம், நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைக் காப்பதற்கானது.

உங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி, உங்கள் கூட்டாட்சி உரிமைகளைப் பறிக்க முயல்பவர்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இது. அனைவரையும் உள்ளடக்கிய நலவாழ்வை உறுதி செய்யவும், உங்கள் முன்னோடித் தலைவர்கள் போற்றிய சமூக நீதிக் கொள்கைகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் இப்போராட்டம் அவசியமாகிறது.

இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.