காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நினைவு குறிப்பு நூலான 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' வெளியீட்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (திங்கள்கிழமை) டெல்லியில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட காங்கிரஸ் அல்லாத ஒரே முதல்வர் இவராவார். அங்கு வந்தடைந்த விஜயை, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வரவேற்றார். முதல்வர் விஜய், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடன் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டார்.
கர்நாடக மாநிலத்துடன் நிலவும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமாரும் இந்த விழாவில் கலந்துகொண்டது, முதல்வரின் இந்த வருகைக்கு முக்கிய அரசியல் முக்கியத்தும் அளித்துள்ளது.
முன்வரிசையில் ராகுல் காந்திக்கு அருகில் முதல்வர் விஜயும், சோனியா காந்திக்கு அருகில் அகிலேஷ் யாதவும் அமர்ந்திருக்க, அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் பிற மாநில முதல்வர்கள் இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்தது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்த நிகழ்வில், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் முதல்வர் விஜய் உரையாடினார். தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான அரசியல் கூட்டணிகளின் சூழல் மாறிவரும் நிலையில், அவரது இந்த டெல்லி வருகை ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் முதல்வர் விஜய் வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை என்றும், இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது என்றும் ஆளும் கட்சி மற்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேகதது விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், தமிழக மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அழைத்து செல்ல வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான திமுக ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினையான இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடம் எடுத்து செல்லுமாறு முதல்வர் விஜயை வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பொதுவெளியில் தமிழகத்திற்கு எதிராக கூறிய கருத்துகள் குறித்து, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் முதல்வர் விஜய் விளக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
காவிரி விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவதை உறுதி செய்ய, காங்கிரஸ் கட்சித் தலைமையிடம் முதல்வர் விஜய் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டார்.