இந்தியா

சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக இன்று காலை முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.

முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றடைந்ததும் காங்கிரசின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேச உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்தன .

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் தவெக தலைவரும், முதல்வருமான விஜய் சந்தித்துள்ளார்.

பின்னர் ராகுல் காந்தியை விஜய் சந்தித்தார். அப்போது உடன், பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடனிருந்தனர்.

கடந்த முறை டெல்லி சென்ற போது சோனியாவை சந்திக்காமல் திரும்பிய நிலையில் இம்முறை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார்.

முன்னதாக, டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த முதலமைச்சர் விஜய், துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் சந்தித்துள்ளார்.

முதலமைச்சராக பதவியேற்றபின் முதன் முறையாக குடியரசுத் தலைவருடன் முதலமைச்சர் விஜய் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.