இந்தியா

அசாமில் 10 ஏக்கரில் அமைய உள்ள திருப்பதி கோவில்

அசாமின் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள 10.33 ஏக்கர் நிலத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக கையகப்படுத்தி உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலை குன்றுகளில் விஷ்ணுவின் அவதாரமான வெங்கடேஸ்வரப் பெருமானுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் வெங்கேடேஸ்வரப் பெருமானின் மாதிரி கோவில்களை அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு எடுத்தது.

அசாமில் அமைய உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமான் கோவில்

இதையடுத்து தற்போது அசாமின் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள 10.33 ஏக்கர் நிலத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக கையகப்படுத்தி உள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை காம்ரூப் மாவட்ட ஆணையர், நில உரிமைச் சான்றுகளை தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை தலைமை வாரியத் தலைவர் பி.ஆர். நாயுடு பேசும்போது, “அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கு இடையேயான பள்ளத்தாக்கில் இந்த கோவில் அமைய உள்ளது.

ஆந்திரப் பிரதேசம் மற்றும் அசாம் அரசுகளுடன் கலந்தாலோசித்து, அடிக்கல் நாட்டுவதற்கான திட்டங்களை விரைவில் இறுதி செய்வோம்” என்று கூறினார்.