ஏ.டி.எம் எந்திரங்கள் எரிந்து சேதம்  
இந்தியா

தெலுங்கானாவில் 3 ஏ.டி.எம் எந்திரங்கள் எரிந்து சேதம்

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் 2 ஏ.டி.எம் எந்திரங்களும் முழுமையாக எரிந்து சேதமானது.

போலீசார் தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து சமூக விரோதிகள் யாராவது ஏ.டி.எம் எந்திரங்களுக்கு தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் ஜோகி பேட்டை காய்கறி மார்க்கெட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்று இரவு ஏ.டி.எம் எந்திரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

தீ மளமளவென அருகில் இருந்த ஏ.டி.எம் எந்திரத்திற்கும் பரவியது. ஏ.டி.எம் எந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு அலாரம் அடித்தது. சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர். ஏ.டி.எம் எந்திரங்கள் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் 2 ஏ.டி.எம் எந்திரங்களும் முழுமையாக எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து வங்கி அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஏடிஎம் மையத்தில் எவ்வளவு பணம் எரிந்து போனது என சோதனை செய்து வருகின்றனர்.

போலீசார் தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து சமூக விரோதிகள் யாராவது ஏ.டி.எம் எந்திரங்களுக்கு தீ வைத்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT