​​திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு 
இந்தியா

​​திருப்​பரங்​குன்​றம் தீப வழக்​கு: இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள்?- தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை திரு​நாளன்று திருப்​பரங்​குன்​றம் மலையில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்​தது.

ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோவில் செயல் அதிகாரி உள்ளிட்ட அனைத்து எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும்.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கடந்​த ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந்தேதி தீபம் ஏற்​றக்கோரி மதுரையைச் சேர்ந்த ராமரவி​கு​மார் உள்​ளிட்​டோர் உயர்நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத்தாக்​கல் செய்தனர். அந்த மனுக்​களை விசா​ரித்த சென்னை உயர்நீ​தி​மன்ற தனி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், தீபத்​தூணில் கார்த்திகை திரு​நாள் அன்று தீபம் ஏற்ற வேண்​டுமென கடந்த டிச.1-ந்தேதி உத்​தர​விட்டார்.

ஆனால், இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலை​யில், மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர் மற்​றும் கோவில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இதையடுத்து ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், செயல் அலு​வலர் ஆகியோர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்​றாததற்​காக வருத்​தம் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்​து, தனி நீதிபதி உத்​தரவை எதிர்த்து தமிழ்​நாடு அரசும், அவம​திப்பு நடவடிக்​கையை எதிர்த்து அதி​காரி​களும் உயர் ​நீ​தி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீடு செய்​தனர். அந்த மேல்​முறை​யீட்டு மனுக்​களை விசா​ரித்த மதுரை அமர்வு, அதி​காரிகளுக்கு எதி​ரான நீதி​மன்ற நடவடிக்​கைக்கு தடை​வி​தித்து உத்​தர​விட்​டது. அதே வேளை​யில், ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை திரு​நாளன்று திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்​தது.

இதனையடுத்​து, தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து மதுரை அமர்வு பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோவில் நிர்​வாகம் தரப்​பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் பி.கருணாகரனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும், அந்தத் தீர்ப்புக்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறையின்படியே கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அரவிந்த் குமார், வி.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:-

அறநிலையத்துறை தரப்பு:- உயர்நீதிமன்ற உத்தரவின் மூலம் ஒரு புதிய நடைமுறையை புகுத்த பார்க்கிறார்கள்.

நீதிபதிகள்:- கார்த்திகை தீபம் என்று அந்த தீப தூணில் விளக்கேற்றும் நடைமுறை முன்பு இருந்ததா?

அறநிலையத்துறை ஆணையர்:- தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நடைமுறை முன்னர் இல்லை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து புதிய ஒரு நடைமுறையை புகுத்த பார்க்கிறது. நடைமுறையில் இல்லாத ஒரு விஷயத்தை எப்படி உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் செயல்படுத்த முடியும்? ஏற்கனவே நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மனுவை விசாரித்து நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

நீதிபதிகள்:- தற்போதைய நிலையில் எந்த ஒரு தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. வழக்கை முழுமையாக விசாரித்து அதன் பின்பே உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

எதிர்மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு:- சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்திருந்த நிலையில் தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தற்போது மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போதும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாக கூறி வழக்கை இழுத்து அடித்து வருகிறார்கள்.

நீதிபதிகள்:- சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி மாதம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில் இத்தனை நாட்கள் தமிழக அரசு என்ன செய்து கொண்டு இருந்தது?

அறநிலையத்துறை தரப்பு:- பல்வேறு ஆவணங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டியதிருந்ததால்தான் காலதாமதம் ஏற்பட்டது. நாங்கள் அனைத்தையும் தற்போது நீதிமன்றத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறோம்.

நீதிபதிகள்:- இந்த விவகாரம் தொடர்பாக ராம ரவிக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி கோவில் செயல் அதிகாரி உள்ளிட்ட அனைத்து எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க வேண்டும். மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற மனுதார்கள் தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. வழக்கு 8 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.