விவசாய கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வது தொடர்பான எந்தவொரு திட்டமும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், விவசாயிகளின் பொருளாதார நிலையை வலுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், அதில் கிசான் கடன் அட்டை மூலம் சரியான நேரத்தில் போதுமான கடன் வழங்குவதும் அடங்கும் என்று கூறினார்.
இந்த அட்டையின் கீழ் ரூ.3 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் வழங்கப்படுவதாகவும், சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசு விவசாயம் மற்றும் அதன் சார்ந்த பணிகளுக்கான பிணையமில்லா குறுகிய காலக் கடன்களை ரூ. 1.60 லட்சத்திலிருந்து ரூ. 2.00 லட்சமாக உயர்த்தி உள்ளது.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னுரிமைத் துறை கடன் வழிகாட்டுதல்களின் கீழ், விவசாயம் உட்பட பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளுக்கு வங்கிகள் மூலம் போதுமான கடன் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. எனவும் தெரிவித்துள்ளார்.