இந்தியா

‘இளம் தலைமுறை உங்களை மன்னிக்காது’: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கக் கூடாது - சிஜேபி வேண்டுகோள்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு நவ.30 முதல் டிச.3 வரை நடைபெற உள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக தனது ஆட்சிப் பிடியை வலுப்படுத்தவே இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டுவருவதாகவும், இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவாக செயல்படக்கூடாது எனவும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நாளை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு கூடும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் அறிமுகம் செய்கிறது.

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமனதான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று சிஜேபி வலியுறுத்தியுள்ளது.

மாறாக, இதற்கு ஆதரவான நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் எடுத்தால், இளம் தலைமுறை அதை ஒருபோதும் மன்னிக்காது என்றும் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிஜேபியின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுதொடர்பாக பேசிய அவர்.,

“இந்தத் தொகுதி மறுவரையறை மசோதாவின் கீழ் எடுக்கப்பட்ட முடிவுகளை நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்குத் தொடரக்கூட முடியாது என்பதுதான் மிகவும் வியப்பளிக்கும் விஷயம். அதாவது, தேர்தல் மாவட்டங்கள் முறையற்ற விதத்தில் மறுவரையறை செய்யப்படுகின்றன என்று யாராவது நம்பினால், அவர்களால் நீதிமன்றத்திற்குச் சென்று தங்கள் தரப்பை வாதிடக்கூட முடியாது.

இது ஏன் செய்யப்படுகிறது? இது முழுக்க முழுக்க பாஜகவுக்குப் பயனளிப்பதற்காகவும், அதன் மூலம் நாட்டிலிருந்து எதிர்க்கட்சிகளை முற்றிலுமாக ஒழிப்பதற்காகவும் செய்யப்படுகிறது.” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT