இந்தியா

கணவரை துடிக்கத் துடிக்க கொன்ற மனைவி: கழுத்தில் கயிறு போட்டு இழுத்து சென்ற வீடியோ வைரல்

தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.மனைவியை குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், நிஜாம்பட்டினம் மாவட்டம், பெலகாவி அடுத்த கோகர்ண மடத்தை சேர்ந்தவர் அமரேந்திர பாபு (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மனைவி அருணா. தம்பதிக்கு 1 மகன்,1 மகள் உள்ளனர்.

அமரேந்திர பாபு தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தினார். இது குறித்து அருணா கணவர் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் அமரேந்திர பாபுவை போலீஸ் நிலையம் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அமரேந்திர பாபு மது போதையில் வீட்டிற்கு வந்தார். மீண்டும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது தனது பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து அருணாவை குத்தி கொலை செய்ய முயன்றார்.

கணவர் தன்னை கொலை செய்து விடுவார் என எண்ணிய அருணா வீட்டிலிருந்த கட்டையை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அமரேந்திர பாபு மயங்கி கீழே விழுந்தார்.

வீட்டிலிருந்த கயிற்றை எடுத்து வந்து கணவரின் கழுத்தில் மாட்டினார். பின்னர் கணவரை வீட்டிற்கு வெளியே தெருவில் இழுத்து சென்றார். கழுத்தில் கயிறு இறுக்கியதால் அமரேந்திரபாபு வலியால் அலறி துடித்தார்.

கணவர் தன்னை கொலை செய்ய முயன்றதால் கடும் ஆத்திரத்தில் இருந்த அருணா கணவர் உடலை இழுத்துச் சென்று துடி துடிக்க கொலை செய்தார். பின்னர் கணவர் உடலை இழுத்து போட்டு வீசிவிட்டு தப்பிச் சென்றார்.

கணவர் உடலை அருணா இழுத்துச் செல்வதை அந்த வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோவை கண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அமரேந்திர பாபு பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அருணாவை தேடி வருகின்றனர்.