இந்தியா

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றி, இந்திய விண்வெளி திட்டத்தின் புதிய வரலாற்று மைல்கல்- குடியரசு தலைவர்

2 செயற்கைக்கோள்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த 4 நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு புதிய இஸ்ரோ தலைவர் நாராயணன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

இஸ்ரோ சார்பில் கடந்த டிசம்பர் 30ம் தேதி அன்று ஸ்பேடேக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

இதைதொடர்ந்து, விண்வெளியில் 2 யெற்கைக்கோள்களை இணைக்கும் வகையில், இஸ்ரோ செயல்படுத்தி வந்த 'ஸ்பேடெக்ஸ்' திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது.

2 செயற்கைக்கோள்களை இணைக்கும் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை அறிந்த 4 நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளுக்கு புதிய இஸ்ரோ தலைவர் நாராயணன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " இந்தியாவின் விண்வெளி திறன்களை உயர்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் வெற்றியானது, இந்திய விண்வெளி திட்டத்தில் புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது" என்றார்.

India's space programme achieves historic milestone with the successful docking of the two satellites launched under Space Docking Experiment, SpaDeX! India is the fourth nation to have demonstrated space docking capability. This achievement paves the way for India's future…