இந்தியா

பிரதமரின் உரை இல்லாமலேயே குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

பிரதமர் மோடி உரையாற்ற இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக உரை ரத்து செய்யப்பட்டது.முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பு வழங்க்கப்படவில்லை.

கடந்த ஜனவரி 28 தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த பிப்ரவரி 1 அன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

இதற்கிடையே கூட்டத்தொடர் தொடக்கத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்றைய மக்களவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்பின் அவை ஒத்திவைக்கப்பட்டது. 

பிரதமர் நரேந்திர மோடியின் உரை இல்லாமலேயே தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று உரையாற்ற இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக உரை ரத்து செய்யப்பட்டு அவை நிறைவுற்றது.

இன்று சபை தொடங்கிய பிறகு, நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச வாய்ப்பு வழங்காததால் பிரதமர் மோடி பேச இருக்கும்போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.  

SCROLL FOR NEXT