மாலதி 
இந்தியா

இந்தியாவுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனையை ரிக்ஷா ஓட்டுநர் ஆக்கிய திருமணமும் கோர எதார்த்தமும்!

ஆக்ரா, மத்திய பிரதேசம், ஒரிசா என சுற்றிச் சுழன்ற மாலதி, அதுவே தன் வாழ்வின் "பொன்னான நாட்கள்" என விவரிக்கிறார்.

உத்தரப் பிரதேசம்

தற்போது நடுத்தர வயதில் உள்ள மாலதிக்கு ஒரு காலத்தில் ஹாக்கி விளையாட்டு தான் எல்லாமுமாக இருந்தது. தனது 6 வயதில் ஹாக்கி விளையாட தொடங்கிய மாலதி பல மாநிலங்களுக்கு பயணப்பட்டு தன் மாநிலத்தையும், 4 முறை சர்வதேச போட்டிகளில் நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

லக்னோவில் உள்ள பனாரசி தாஸ் பொறியியல் கல்லூரியில் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றி உள்ளார்.

ஆனால் கடினமான திருமண வாழ்வு, பொருளாதார நெருக்கடி, மகனை வளர்க்க வேண்டிய பொறுப்பு ஆகியவற்றால் இந்த முன்னாள் ஹாக்கி வீராங்கனையின் வாழ்வு அவரை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக்கியது.

2013 முதல் அவரது வாழ்வில் ஏற்பட்ட இந்த திருப்பம் இன்று வரை ஒருவழிபாதையாக தொடர்கிறது. லக்னோவின் முதல் ரிக்ஷா ஓட்டுநர் என ஊடகங்கள் அவருக்களித்த விளம்பரப் பட்டமே அவரது தற்போதைய அடையாளம்.

15 ஆண்டுகளாக லக்னோவின் சாலைகளில் மாலதியின் ஆட்டோ ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த பொருள் ஆதாரத்தை வைத்து தான் அவருக்கும் வண்டி ஓடுகிறது.

காரணம்?..

சரி, இவரை பற்றி இப்போது பேச என்ன காரணம்?.. பேசப்படாததே அவரை பற்றி பேச காரணம். மாலதியை போன்று பல பெண்கள், வீராங்கனைகள் இருக்கின்றனர். இவர் சர்வதேச போட்டிகளில் விளையாடித்தால் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் பல வீராங்கனைகளின் தொடக்கம் மாவட்டங்களோடு முடிந்துவிடுகிறது. மாலதி இண்டர்னேஷனல் செல்லும் வரை கிடையாத சுதந்திரம் இங்கு பல பெண்களுக்கு ஆரம்பக்கத்திலேயே பறிக்கப்பட்டு விடுகிறது.

ஏன் சுற்றி வளைப்பானேன்.. அண்மையில் சோனாலி சிங் என்ற இன்ஸ்டாகிராம் கன்டென்ட் கிரியேட்டர் நமது மாலதியை பேட்டி கண்டிருக்கிறார். அதில் அவர் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

ஹாக்கியால் நிறைந்த சிறு பிராயம்

தன் சிறு பிராயமும் அது ஹாக்கியால் நிறைந்திருந்ததை பற்றியும் பேசியும் மாலதி, " நான் 6 வயதிலேயே விளையாட தொடங்கிவிட்டேன். அதுவே நான் ஆழமான ஆர்வம் கொண்ட விளையாட்டாக இருந்தது. மாநில அளவிலான போட்டியில் விளையாடவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது" என்று நினைவுகூர்கிறார்.

போட்டிகளுக்காக ஆக்ரா, மத்திய பிரதேசம், ஒரிசா என சுற்றிச் சுழன்ற மாலதி, அதுவே தன் வாழ்வின் "பொன்னான நாட்கள்" என விவரிக்கிறார். அவர் எப்போதும் ஆட்டத்தில் சென்ட்ரல் பார்வேர்ட்டில் தான் விளையாடுவாராம்.

என முதல் தேசிய அளவிலான போட்டி புவனேஷ்வரில் நடந்தது. இரண்டாவது ஆக்ராவில். நான் விளையாடும் அணி மீது மக்கள் பணம் கட்டி பந்தயம் வைப்பார்கள். அது ஒரே நேரத்தில் பயமாகவும் உற்சாகமூட்டுவதாகவும் இருக்கும். ஆனால் எனது எல்லா கனவுகளும் மிக மிக எழுத்தாக நசுக்கப்பட்டு விட்டன. அதை புரிந்துகொள்வதே எனக்கு கடினமாக உள்ளது" என்கிறார் .

"என் தந்தை நான் விளையாடுவதை ஆதரிக்கவில்லை. எனக்கு அண்ணன்கள் இல்லை. எனவே எனக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைத்தால் நல்லது என்றே அவர் நினைத்தார்" என்று தற்போது நினைவுகூரும் மாலதிக்கு 2000 ஆம் ஆண்டில் அவரின் 20களின் பாதியில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருமணம்

"அது மிகவும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை இல்லை. நான் பெரும்பாலான நேரங்களில் துன்புறுத்தப்பட்டேன். ஆனால் நான் செல்ல வேறு இடம் இல்லை. எனவே நான் அங்கேயே இருந்தேன். 2004 இல் எனக்கு மகன் பிறந்தான். அதன் பிறகும் எதுவும் மாறவில்லை. வார்த்தைகளளாலும், உடல் ரீதியாகவும் நான் துன்புறுத்தப்பட்டேன். யாரும் என் மீது இரக்கம் கொண்டு உதவ வரவில்லை.

என் மகன் பிறந்த 1 மாதத்தில் நான் என் கணவர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். என் மகனும் நான் அனுபவிக்கும் கொடுமைகளை அனுபவிக்க வேண்டாம் என்று எண்ணினேன்" என்கிறார்.

தன் பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய மாலதிக்கு இப்போது தன்னையும் தன் குழந்தையையும் காப்பாற்ற ஒரு வேலை தேவையாக இருந்தது.

தன் பெயரின் பின்னால் இருக்கும் கணவன் பெயரை துறந்த மாலதி "எனக்கு எதுவும் வேண்டாம். நானே சொந்தக் காலில் நிற்பேன். என் மகனையும் நானே வளர்ப்பேன். பின்னர் ஏன் எனக்கு அந்த பெயர்" என கேக்கிறார் மாலதி.

வேலை

ஹாக்கி மட்டுமே தான் அறிந்த ஒரே விஷயம் என்பதால் பயிற்சியாளர் வேலை தேட ஆரம்பித்தார். 2005 இல் பாபு பனாரசி தாஸ் கல்லூரியில் பெண்கள் அணி பயிற்சியாளராக அவரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு அவர் வேளைக்கு சேர்ந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக மகனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போக 2 ஆண்டுகளில் அந்த வேலையை விட வேண்டிய கட்டாயம் மாலதிக்கு ஏற்பட்டது.

2007 இல் பணியை விட்ட பின் செய்வதறியாது இருந்த மாலதி அதன்பின் தேர்ந்தெடுத்தது தான் ஓட்டுநர் பணி. தொண்டு நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று லக்னோவின் தெருக்களில் தான் முதல் நாள் ஆட்டோ ரிக்ஷா ஓட்டிச் சென்ற அனுபவத்தை நினைவு கூறும் மாலதி, " அது நான் உயிர்ப்போடு இருப்பதாக என்னை உணர வைத்தது. அந்த கணத்தில், எல்லாம் என் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக நான் உணர்ந்தேன்.

ஆனால் ஆரம்பத்தில் என்னை பார்த்து எல்லோரும் சிரித்தனர். என் ஆட்டோவில் ஏற மறுத்தனர். ஆனால் நான் விடாப்பிடியாக பணியை தொடர்ந்தேன். காலம் கடக்க, எல்லாம் மாறியது" என்கிறார்.

முதல் ரிக்ஷா ஓட்டுநர்

"நான் லக்னோவின் முதல் ரிக்ஷா ஓட்டுநர். முதலில் நான் இ ரிக்ஷா ஓட்டினேன். கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருகிறேன். நான் ரிக்ஷா ஓட்டிய ஆரம்ப காலங்களில் பலரும் என்னை பற்றி கமெண்ட் அடிப்பார்கள்.

ஆனால் நான் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. நான் சில பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட கற்றும் தந்துள்ளேன். அவர்கள் இப்போது வண்டி ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்."என்கிறார்.

தன் ஹாக்கி விளையாட்டை விட்டு ஓட்டுநர் ஆக வேண்டிய சூழல் குறித்து பேசிய அவர், " கடினமாக உழைக்கும் ஒரு பெண், இன்று ரிக்ஷா ஓட்டிக் கொண்டிருப்பதை பார்த்து அரசாங்கம் தனக்கு தானே வெட்கப்பட வேண்டும்" என்கிறார்.

ரிக்ஷா ஓட்ட வேண்டாம் என்று தனது தந்தை அழுததையும், பிறரின் புரணிகளையும் நினைவுகூர்ந்த மாலதி " நான் யாரிடமும் தோற்க விரும்பவில்லை." என தீர்க்கமுடன் கூறுகிறார்.

SCROLL FOR NEXT