மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும்நிலையில் ஈரானில் உள்ள பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு மற்றும் உதவிக்கரம் நீட்டும்வகையில் காஷ்மீர் மக்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். குழந்தைகளும் தாங்கள் சேமித்து வைத்திருந்த சிறுதொகையையும் கொடுத்து வருகின்றனர்.
அந்தவரிசையில் பெண் ஒருவர் 28 ஆண்டுகளுக்கு முன் இறந்த தனது கணவர், அவருக்கு அளித்த தங்கநகை ஒன்றை நன்கொடையாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வீடியோ ஒன்றை பகிர்ந்து, "உங்கள் கண்ணீரும், தூய்மையான உணர்ச்சிகளுமே எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாகும்," என இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானியர்களுக்கு மனிதாபிமான உதவி வழங்க விரும்பும் இந்தியர்களுக்காக, இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் மார்ச் 14 அன்று வங்கி விவரங்களைப் பகிர்ந்தது. அதனைத் தொடர்ந்து பல இந்தியர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர்.