அஜய் சர்மா 
இந்தியா

நகர வாழ்க்கையை விட்டு மலை கிராமத்திற்கு சென்ற ஜென் இசட் இளைஞருக்கு கிடைத்த அனுபவங்கள்!

இரண்டு மாதங்கள் ஒரு இடத்தில் இருந்துவிட்டு அதை விட்டு வருவது இத்தனை கடினமானது என்று நினைக்கவில்லை

வாழ்க்கை அதிவேகமாக செல்லும் மெட்ரோபோலிடன்களால் களைப்புற்று தொலைதூர பகுதியில் அமைதியான வேலையை தேட பலர் விரும்புகின்றனர்.

பலர் அப்படி நினைப்பதோடு நிறுத்திக்கொள்ளும் வேலையில் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிய ஜென் இசட் கண்டெட் கிரியேட்டரான அஜய் சர்மா, டெல்லியின் பரபரப்பான வாழ்க்கையை உதறிவிட்டு இமாச்சல பிரதேசத்தின் மனாலியில் உள்ள மலை கிராமமான சியால் கிராமத்திற்கு இந்த ஆண்டு மே மாதம் இடம்பெயர்ந்தார்.

சரியாக 71 நாட்கள் அங்கு கழித்து ஆகஸ்ட் 2 இல் டெல்லி திரும்பிய அஜய் சர்மா, அங்கு கழித்த நாட்களில் 55 வீடியோக்கள் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

தற்போது மீண்டும் டெல்லி திரும்பியுள்ளது பற்றி அவர் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மனாலியில் தான் இருந்த நாட்களை குறித்தும் அங்கிருந்த எளிமையான வாழ்க்கை முறை குறித்தும், சேகரித்த நினைவுகள் குறித்தும் அவர் விவரிக்கிறார்.

புதிய வாழ்க்கை

யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மனாலிக்கு சென்ற புதிதில் பரீட்சயம் இல்லாத சாலைகளும் பரீட்சயமானதாகின. மலைகள் வீட்டில் இருக்கும் உணர்வை தரத் தொடங்கின. மறக்க முடியாத ஞாபகங்கள் கிடைத்தன.

ஆனால் மீண்டும் டெல்லி திரும்பியபோது நகர வாழ்க்கைக்கு தகவமைத்து கொள்வது கடினமானதாக ஆகிவிட்டது. இரண்டு மாதங்கள் ஒரு இடத்தில் இருந்துவிட்டு அதை விட்டு வருவது இத்தனை கடினமானது என்று நினைக்கவில்லை என கூறுகிறார் அஜய்.

ஆனால் தொடங்கப்படும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் இரு முடிவு இருக்கிறது. தற்போது தன் வாழ்வின் புதிய கட்டத்தை தொடங்கியது போல் உள்ளது என்றும் ஒப்புக்கொள்கிறார் அவர்.

அன்றாட செலவுகள்

மனாலியின் அந்த கிராமத்தில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் மாதம் ரூ.14000 வாடகைக்கு (வை பை - கரண்ட் பில் சேர்த்து) செலவழித்திருக்கிறார்.

செலவை குறைக்க மாதம் ரூ.3500 க்கு பலசரக்கு வாங்கி வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டிருக்கிறார். சமைக்க தோணாத நாட்களில் வெளியே சாப்பிட வாரம் ரூ.500 மட்டும் ஒதுக்கியிருக்கிறார்.

உள்ளூரில் உள்ள ஒரு ஜிம்மிலும் அவர் சேர்ந்திருக்கிறார். அதற்கு கட்டணம் ரூ.1800. பேரம் பேசி ரூ.1500 என்று குறைத்திருக்கிறார். எங்கு சென்றாலும் நடந்தே செல்வதால் போக்குவரத்துக்கு பெரிதாக செலவாகவில்லை.

மொத்தமாக மாதம் அவருக்கு ரூ.21000 தான் செலவாகி உள்ளது.

இடர்பாடுகள்

இந்த வாழ்க்கை அவருக்கு முழுவதும் சொர்கமாகவும் இல்லை. மலைக் காட்சி, காலை சூரியோதயம், பச்சைப் பசேல் இடங்களின் ஊடே செல்லும் சாலைகள், உள்ளூர் உணவுகள், நெருப்பை சுற்றி அமர்ந்திருக்கும் புதிய மனிதர்கள் என்பதே அவர் எதிர்பார்ப்பு.

அதில் பெரும்பாலானவற்றை அவர் பார்த்தபோதும், மலைகளுக்கு சுற்றுலா பயணியாக செல்வது என்பதும் அங்கேயே வாழ்வது என்பதும் முற்றிலும் வேறுபட்டது என்று அவர் உணர்ந்துள்ளார். அதையே அவரை சமூக வலைத்தளத்தில் பின்பற்றிய பலரும் கூறியுள்ளனர்.

எந்த நேரத்திலும் இணையம் கிடைக்காமல் போகும். எதிர்பாராத நேரத்தில் மழை பேசியத் தொடங்கும், தானாகவே சமைத்து, அனைத்தையும் நிர்வகிக்க வேண்டும், மழைக்காகதில் சாலைகளின் மோசமான நிலை, சுற்றுலா தலங்களுக்கு நீண்ட மலையேற்றம் செய்ய வேண்டி இருப்பது, நடந்து செல்ல வேண்டியது ஆகியவற்றை அசௌகர்யமாக கருத்தியுள்ளார்.

டெல்லி திரும்பியதும் ஜூலை 3 அன்று தனது பயணம் குறித்த இந்த வீடியோவை அவர் பதிவிட்டுள்ள நிலையில் இதற்கு பலவிதமான கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.