இந்தியா

தொகுதி மறுவரையறை மசோதா இந்திய அரசியலமைப்பிற்கே எதிரானது..!- காங்கிரஸ் எம்.பி வேணுகோபால்

தொகுதி மறுவரையறை மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.

தொகுதி மறுவரையறை மசோதா அறிமுக முன்மொழிவு மீதான விவாதத்தில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தொகுதி மறுவரையறை மசோதா இந்திய அரசியலமைப்பிற்கே எதிரானது.

அடிப்படை அரசியலமைப்பை தகா்த்து உரிமைகளை பறிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமையாக ஒரு தரப்பால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மகளிர் இடஒதுக்கீட்டை கடந்த 2024-ம் ஆண்டே அமல்படுத்த கூறினோம், ஏன் அமல்படுத்தவில்லை?

தொகுதி மறுவரையறை மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.