கார்கே, ராகுல் 
இந்தியா

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரம் குறித்து விவாதிக்க இன்று கூடியது காங்கிரஸ் செயற்குழு

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன.

ஞானேஷ் குமார் விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தை கார்கே இன்று கூட்டியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையின் போது, ​​இரண்டு தேர்தல் ஆணையர்கள் தங்கள் பெயர்களில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன.

காங்கிரஸ் கூட்டம்

இந்த சூழலில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரம் குறித்து ஆலோசித்து முடிவெடுப்பதற்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று கூட்டியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த குளறுபடிகள் குறித்து விவாதிக்கவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வைப்பதற்கான செயல்திட்டம் வகுக்கவும் இந்த கூட்டம் இன்று டெல்லியில் கூட்டப்பட்டுள்ளது.

இந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்

கார்கே பேச்சு

முன்னதாக இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை தேர்தல் ஆணையர்களே வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இதேபோல் கேரள முன்னாள் தலைமைச் செயலரும், தன்னை தேர்தலில் போட்டியிடும்படி தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து ஞானேஷ் குமார் பாஜக சித்தாந்தத்தை பரப்பியதும், அக்கட்சியின் தொண்டராக மாறிவிட்டதும் தெரிகிறது.

நாட்டில் ஜனநாயகம் நீடிப்பது குறித்து கவலையை இது ஏற்படுத்துகிறது. ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் பதவி விலகிய பிறகும் அவருக்கு எதிராக எங்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT