பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் கண்காட்சி ஒன்றை தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்து சென்ற அடுத்த கணமே தொட்டியில் இருந்த மீன்களை மக்கள் திருடிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. நேற்றைய தினம் சஹர்சா பகுதியில் மா விஸ்ஹாரி கோவில் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அமரப்பூரில் அரசு சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது பையோப்ளோக் [biofloc] தொட்டியில் காட்சிக்கு மிதக்கவிடப்பட்டிருந்த மீன்களுக்கு உணவளித்து மகிழ்ந்த நிதிஷ் குமார் கண்காட்சியில் இருந்து கிளம்பினார். அவர் கிளம்பிய கண நேரத்திலேயே தொட்டியில் இருந்த மீன்களை பிடிக்க மக்கள் தள்ளுமுள்ளுப்பட்டுள்ளனர்.
காவலுக்கு யாரும் இல்லாமல் மீன்களை மக்கள் அள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நாங்கள் மீன் பிடிக்கத்தான் வந்தோம் நிதிஷ் குமாரை பார்க்க வரவில்லை என்று இளைஞர்கள் கத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
'Sarkari Fish' looted by people as soon as CM Nitish Kumar left the exhibition venue. ? ? pic.twitter.com/V8PItPpsS4