டெல்லியில் உணவு மற்றும் டெண்ட் கூடார சர்வீஸ் தொழில் செய்து வருபவர் லோகேஷ் குப்தா (32).
இவர் அண்மையில் அஜய் பால் என்பவரது மகளின் திருமணத்திற்காகச் சாப்பாடு செய்து வழங்கியுள்ளார்.
திருமண சாப்பாடு செலவு மொத்தம் ரூ.2.5 லட்சம். இதில் அஜய் பால் சுமார் ரூ.2 லட்சம் வரை பாக்கி வைத்திருந்தார்.
தரவேண்டிய தொகையைக் கேட்பதற்காக அஜய் பாலின் வீட்டிற்கு நேற்று இரவு சென்ற லோகேஷ் குப்தாவிற்கும், அஜய் பாலிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த அஜய் பால் மற்றும் அங்கிருந்த இரு சிறுவர்கள், லோகேஷை வலுக்கட்டாயமாக வீட்டின் மொட்டை மாடிக்கு இழுத்துச் சென்றனர்.
அங்கு எலக்ட்ரிக் கிரைண்டரை ஆன் செய்து அதற்குள் லோகேஷின் இரண்டு கைகளையும் நுழைத்து ஆழமான காயங்களை ஏற்படுத்தி சித்திரவதை செய்துள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் லோகேஷை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, முக்கியக் குற்றவாளியான அஜய் பாலை (53) கைது செய்தனர். அவருடன் இருந்த ஒரு சிறுவர்களையும் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.