சிறு சேமிப்பு வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என மத்திய அரசு தகவல் 
இந்தியா

பி.பி.எப்.-க்கான வருடாந்திர வட்டி விகிதம் 7.1 சதவீதமாக நீடிக்கும் - மத்திய அரசு தகவல்

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

மாலை மலர்

புதுடெல்லி:

பொது வருங்கால வைப்புநிதி (பி.பி.எப்.), தேசிய சேமிப்பு பத்திரம் (என்.எஸ்.சி.) போன்றவற்றுக்கான வட்டி விகிதத்தை காலாண்டு அடிப்படையில் மத்திய அரசு அறிவிக்கிறது.

அந்தவகையில் நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டான ஜனவரி 1 முதல் வருகிற மார்ச் 31-ந்தேதி வரை பி.பி.எப்., என்.எஸ்.சி. உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றப்படாமல் நீடிக்கும். மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு தாக்கத்தால் பணவீக்கம் அதிகரித்துள்ள சூழலில்,

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு மாற்றம் செய்யவில்லை.

அதன்படி, பி.பி.எப்.-க்கான வருடாந்திர வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், என்.எஸ்.சி.க்கான வட்டி விகிதம் 6.8 சதவீதமாகவும் நீடிக்கும்.

பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு 2021-22 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டி விகிதத்தில் மாற்றமும் செய்யாமல் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடையும் நான்காம் காலாண்டிலும் அதே வட்டி விகிதம் தொடரும் என்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.