இந்தியா

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு நன்றி- பிரதமர் மோடி

மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்கு எங்கள் கூட்டணி தொடர்ந்து உழைக்கும்.எங்களுக்கு ஆதரவு அளித்த ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி.

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வயநாடு இடைத்தேர்தல், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி கருத்து வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மகாராஷ்டிராவில் வளர்ச்சியும் நல்ல நிர்வாகமும் வெற்றி பெற்றுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியதற்காக மராட்டிய மாநிலத்தின் சகோதர, சகோதரிகளுக்கும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அன்பும், அரவணைப்பும் ஈடு இணையில்லாதது.

மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்கு எங்கள் கூட்டணி தொடர்ந்து உழைக்கும்.

எங்களுக்கு ஆதரவு அளித்த ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.