இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப். குழுவினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 3 வீரர்கள் காயம்!

சம்பவத்தைத் தொடர்ந்து சோதனைச் சாவடியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ காவல் படையினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நாகா சோதனைச் சாவடியில் பணியில் இருந்த வீரர்கள் மீது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மூன்று வீரர்களும் உடனடியாக அருகில் உள்ள அனந்த்நாக் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து, தற்போது அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT