கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் 
இந்தியா

புல்வாமாவில் மீண்டும் பரபரப்பு - பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு

பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் 5 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டனர்.

புல்வாமா:

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள வான்போரா பகுதியில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து புல்வாமா காவல்துறையினரும்,  மத்திய ரிசர்வ் ஆயுத படையினரும் இணைந்து அப்பகுதியில் சோதனை நடத்தினர். 

இதில் சக்திவாய்ந்த 5 கிலோ ஐ.இ.டி வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் செயலிழக்க செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் சில நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சாலையின் ஓரத்தில் இந்த வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றை கண்டுபிடித்து அகற்றியதன் மூலம் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT