ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.
இங்கிருந்து இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு 109 பயணிகளுடன் புறப்பட்ட ஐந்து நிமிடங்களில் ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
உஷாரான விமானி உடனடியாக வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து விமானம் திருப்பி விடப்பட்டு மீண்டும் ஐதராபாத் விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த 109 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமானி சரியான நேரத்தில் தொழில்நுட்ப கோளாறை கண்டறிந்து உடனடியாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தரையிறங்கிய விமானத்தை தொழில்நுட்ப குழுவினர் அதை ஆய்வு செய்து வருகின்றனர்.