இந்தியா

வீடு புகுந்து மாணவியை கொன்றது ஏன்? - காதலன் பரபரப்பு வாக்குமூலம்

ஹரிணியும் நானும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்.

தெலுங்கானாவில் வீடு புகுந்து மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பவன் என்பவரை கைது செய்தனர். காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.

தெலுங்கானா மாநிலம் கோத்தகுடம் மாவட்டம், வெங்கண்ணபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி. பி.எஸ்சி நர்சிங் படித்து வந்தார். இவர் கடந்த மாதம் 21-ந்தேதி வீட்டில் கழிவறை அருகே கொலை செய்து வீசப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த பவன் என்பவர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. மேலும் பவன் தலைமறைவானது தெரியவந்தது. போலீசார் செல்போன் எண் மூலம் பவன் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று இந்த கொலை சம்பவத்தில் பவனை கைது செய்தனர்.

காதல் தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பவன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

ஹரிணியும் நானும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். ஆனால் இரு குடும்பங்களுக்கும் இடையே முன்பே தகராறுகள் இருந்ததால், ஹரிணிக்கும் எனக்கும் திருமணம் செய்து வைக்கப் பெரியவர்கள் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் எனது மோசமான நடத்தை மற்றும் தீய பழக்கவழக்கங்களால், ஹரிணி என்னை புறக்கணிக்க தொடங்கினார். அவள் தனது இன்ஸ்டாகிராம் ஐடியையும் மாற்றினாள். இதிலிருந்துதான் ஹரிணியுடன் சண்டை தொடங்கியது. ஹரிணி வேறொரு வாலிபரை காதலிப்பதாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. கடந்த மாதம் 3-ந் தேதி, அவள் வேறொரு வாலிபருடன் அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்திருந்ததை நான் கண்டுபிடித்தேன்.

கடந்த மாதம் 21-ந்தேதி, ஹரிணி கோத்தகுடெமில் உள்ள தனது அத்தை வீட்டிலிருந்து வெங்கண்ண பாலத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றாள். அப்போது அவரிடம் பேச முயன்றேன். மேலும் போனிலும் தொடர்பு கொண்டேன் அவர் இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

அதே நாளில், பிற்பகல் 3.20 மணிக்கு, ஹரிணியின் தாய் அருகிலுள்ள ஒரு உறவினர் வீட்டிற்குச் சென்றார். இதைக் கவனித்த நான், ஹரிணியின் வீட்டிற்குள் நுழைந்தேன். வீட்டின் பின்புற முற்றப் படிகளில் இருந்த ஹரிணியை, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவன் வற்புறுத்தினேன். அதற்கு மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஏற்கனவே கோபத்தில் இருந்த நான் தயாராக கொண்டு வந்திருந்த பைக்கின் கிளட்ச் வயரால் ஹரிணியின் கழுத்தை இறுக்கினேன். அவர் துடிதுடித்து இறந்தார். பின்னர் உடலை கழிப்பறைக்குப் பின்னால் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT