தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 1980களில், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மூத்த மாவோயிஸ்ட் தலைவர் திப்பிரி திருப்பதி என்ற தேவ்ஜி, அம்மாநில காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதை தொடர்ந்து தான் பாதியிலேயே நிறுத்திய பன்னிரண்டாம் வகுப்பை முடித்துவிட்டு, சட்டமேற்படிப்பை பயில விரும்புவதாகவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்ட் கட்சியின் தடையை ரத்து செய்து, அரசியல் கட்சியாக அங்கீகாரம் செய்யும்படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் முப்பல்லா லட்சுமண ராவ் என்பவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, தவறான வழியில் சென்ற தன்னை போன்ற நபர்கள், மீண்டும் தங்களின் இயல்பு வாழ்க்கையை தொடர விரும்புவதாகவும் தேவ்ஜி தெரிவித்துள்ளார்.