சிக்கியுள்ள வாலிபர் 
இந்தியா

கேரளாவில் பாறை இடுக்கில் சிக்கிய வாலிபர் மீட்பு

பாலக்காட்டைச் சேர்ந்த வாலிபர் மலை இடுக்கில் சிக்கிக் கொண்ட நிலையில், ராணுவம் இன்று அவரை மீட்டது.

பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (வயது28). இவரும் வேறு 3 நண்பர்களும் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றனர்.

மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

இதைத்தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றனர். ஆனால் பாபு சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை. 

இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேடும்பணி தொடங்கியது. நீண்ட நேரத்திற்கு பின் வாலிபர் பாபு சிக்கியுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், அவரை மீட்க ராணுவம் உதவி கேட்கப்பட்டது. ராணுவம் நேற்று இரவில் இருந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டது.

இந்த நிலையில், இன்று காலை வாலிபர் பாபு மீட்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி தவித்த வாலிபர் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் படியுங்கள்... அருணாச்சல பிரதேசம் - பனிச்சரிவில் சிக்கிய 7 இந்திய ராணுவ வீரர்கள் உடல்கள் மீட்பு