இந்தியா

ஏப்ரல் 1 முதல் பயணிகள் வாகனங்கள் விலையை உயர்த்தும் Tata Motors

தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளதால் இந்த விலை உயர்வு என டாடா நிறுவனம் தெரிவித்தது.

இந்தியாவில் கார் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து வாகனங்கள் விலைகளை 0.5 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விலையில் உயர்வு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் மட்டுமின்றி பி எம் டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற முன்னணி கார் நிறுவனங்களும் ஏப்ரல் மாதம் முதல் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

தயாரிப்புச் செலவு அதிகரித்து வருவதால், அந்தக் கூடுதல் சுமையை ஈடுகட்டும் வகையில் இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.