TANCET 2026 Result 
இந்தியா

TANCET 2026 ரிசல்ட் அவுட்! அடுத்தது என்ன? ஆன்லைன் கலந்தாய்வு, கல்லூரி தரவரிசைப் பட்டியல் எப்போது?

மாணவர்கள் மே 27, 2026 முதல் ஜூன் 26, 2026 வரை தங்களின் அதிகாரப்பூர்வ மதிப்பெண் அட்டையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லுரிகளில் முதுகலை மேலாண்மை மற்றும் கணினிப் படிப்புக்களுக்கான (MBA / MCA) சேர்க்கைக்கு நடத்தப்படும் TANCET 2026 தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

தேர்வு நடத்தப்பட்ட வெறும் 13 நாட்களுக்குள்ளேயே அண்ணா பல்கலைக்கழகம் இந்த முடிவுகளை மிக விரைவாக வெளியிட்டுள்ளது.

தேர்வெழுதிய மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை அண்ணா பல்கலைக்கழகத்தின் TANCET அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ளீடு செய்து, தங்களின் மதிப்பெண்களை உடனடியாகச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

மாணவர்கள் மே 27, 2026 முதல் ஜூன் 26, 2026 வரை தங்களின் அதிகாரப்பூர்வ மதிப்பெண் அட்டையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஜூன் 26-ஆம் தேதிக்குப் பிறகு இணையதளத்தில் இருந்து மதிப்பெண் அட்டையைப் பெற முடியாது. ஒருவேளை தவறவிட்டால், மாற்று மதிப்பெண் அட்டைபெற ரூ.300 அபராதக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதால் முன்கூட்டியே பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

மதிப்பெண் அட்டை வெளியாவதற்குள் மாணவர்களின் பெயர், இனிஷியல், பிறந்த தேதி, பாலினம் மற்றும் சாதிப் பிரிவு ஆகியவற்றில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதைத் திருத்திக் கொள்ளப் பல்கலைக்கழகம் வாய்ப்பளித்துள்ளது.

மாணவர்கள் தங்களின் டான்செட் ஹால் டிக்கெட் மற்றும் சரியான சான்றிதழ்களின் நகல்களை tanceeta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உடனடியாக மாற்றிக் கொள்ளலாம். மதிப்பெண் அட்டைப் பதிவிறக்கம் செய்யப்பட்ட பிறகு எந்த வித திருத்தங்களும் செய்யப்பட மாட்டாது.

தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால், அடுத்தகட்டமாக எம்பிஏ மற்றும் எம்சிஏ ஆகிய படிப்புகளுக்கான Online Counselling தொடங்கும் என்றும் விரைவில் கட்-ஆஃப் மற்றும் தரவரிசைப் பட்டியலை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் எந்தந்த கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை அறிய, "TANCET 2026 தரவரிசை வாரியான கல்லூரிகளின் பட்டியலை" இப்போதே சரிபார்த்துத் தங்களின் சேர்க்கை வாய்ப்புகளைத் திட்டமிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.