இந்தியா

தாயாரை அறையில் அடைத்து விட்டு மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்த வாலிபர் கைது

வேலைக்கு சென்ற மனு, மாற்றுத்திறனாளி பெண்ணின் தாயாரை ஒருஅறையில் அடைத்துவிட்டு, அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.பெண் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலாளி மனுவை கைது செய்தனர்.

Suresh K Jangir

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் தொடுபுழா, கரிங்குன்னத்தை சேர்ந்தவர் மனு (வயது 45). தொழிலாளியான இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலைக்கு சென்றார். வீட்டில் 46 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணும், அவரது தாயாரும் மட்டுமே இருந்தனர்.

இதையடுத்து அங்கு வேலைக்கு சென்ற மனு, மாற்றுத்திறனாளி பெண்ணின் தாயாரை ஒருஅறையில் அடைத்துவிட்டு, அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுபற்றி அந்த பெண் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலாளி மனுவை கைது செய்தனர்.