கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் பர்த்வான் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள ஒரு சிறப்பு வார்டில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று அதிகாலை இந்த வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது. இதைப்பார்த்த நோயாளிகள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
பின்னர் அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுபற்றி தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து ஒரு மணி போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சந்தியா ராய் (வயது 60) என்ற பெண் உயிரிழந்தார். சிலர் தீ காயமடைந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.